2026 மே 09, சனிக்கிழமை

மஹிந்தோதைய திட்டத்தின் கீழ் 4 ஆய்வு கூடங்களை நிறுவ நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சிஹாரா லத்தீப்


காத்தான்குடி பிரதேசத்தில் 4 மஹிந்தோதைய ஆய்வுகூடங்களை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காத்தான்குடி மத்திய கலலூரி, அந்நாசர் வித்தியாலயம், அல்அமீன் வித்தியாலயம், அல்ஹிறா மஹா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளிலேயே மஹிந்தோதைய ஆய்வுகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

1000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் மஹிந்தோதய திட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு தலா 80 இலட்சம் ரூபா செலவில் இவை அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் சுமார் 80  இலட்சம் ரூபா செலவில் புதிய ஆய்வுகூடமொன்று நிறுவப்படவுள்ளது. இந்த ஆய்வுகூட அபிவிருத்தி பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகான சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .