2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஐம்பதாயிரம் ரூபா வீதம் 45 பேருக்கு கடனுதவி

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு நாவற்குடா நொச்சிமுனை விஷ்னு பெண்கள் சனசமூக நிலையத்திலுள்ள பெண்களின் சுய தொழில் ஊக்குவிப்பு திட்டத்திற்காக 50 ஆயிரம் ரூபா வீதம் 45 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டன.

மாவட்டத்திலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் மக்கள் சக்தி செயற்திட்டம் ஞாயிற்றுக்கிழமை(25) மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போதே மேற்படி 45 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.

நாவற்குடா நொச்சிமுனை விஷ்;னு பெண்கள் சனசமூக நிலையத்தின் தலைவி திருமதி திருமணி தேவி சுவீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் கே.சந்தனம், மட்டக்களப்பு முகாமையாளர் தேசமான்ய கே.சத்தியநாதன், மற்றும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் உட்பட முக்கியஸ்த்தர்கள் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .