2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உன்னிச்சை - இராசதுரைநகருக்கு 15 நிரந்தர வீடுகள் கையளிப்பு

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை - இராசதுரைநகர் கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 15 நிரந்தர வீடுகள் வெள்ளிக்கிழமை (07) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

சுவீடன் கூட்டுறவு நிலையம் இவ்வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் மக்களையும் மீள் கட்டியெழுப்பும் மனிதாபிமான உதவியளிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இராசதுரைநகர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 730,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

வீடுகள் கையளிப்பு நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஸி திஸ்ஸநாயக்க, சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் ரி. மயூரன், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், ஆயித்தியமலை பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் விஜயசுந்தர மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட உன்னிச்சைப் பிரதேச மக்களும் உயிர், உடமைகளை இழந்துள்ளனர். இதற்கு முன்னர் இம் மக்கள் தற்காலிக கொட்டில்களிலும் களிமண் குடிசைகளிலும் சேதமைடைந்த வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறான மக்களுக்கு, சுவீடன் கூட்டுறவு நிலையத்தால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் இப்புதிய நிரந்தர வீடுகள் பேருதவியாக அமைந்துள்ளன என்று பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X