2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனனதினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனனதினம் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாக்குழு ஏற்பாடுசெய்த ஜனனதின நிகழ்வுகள் கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபரும் கல்லடி சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாக்குழுவின் தலைவருமான திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி கபாலிசானந்தா மகாராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களினால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் ஆன்மீகத்தொண்டு தொடர்பில் உரைகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாக்குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X