2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

'நவகிரி குளத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வழங்கப்படல் வேண்டும்'

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


'இக்கினியாகல குளத்திலிருந்து நவகிரி குளத்திற்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வருடாந்தம் வழங்கப்படல் வேண்டும். இந்த நீர் இற்றைக்கு 25 வருட காலமாக வழங்கப்படாமல் இருந்து வருகின்றது. இதனால் விவசாயிகளின் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளும் நிலப்பரப்பினை அதிகரிக்க முடியாதுள்ளது' என நவகிரி பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் மார்க்கண்டு-மயூரன் தெரிவித்துள்ளார்.

களுமுந்தன்வெளி ஸ்ரீ விக்னேஸ்வரா விவசாயிகள் அமைப்பு ஏற்பாடு செய்த சிறுபோக நெல் வயல் அறுவடை விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள களுமுந்தன்வெளி வயற் கண்டத்தில் சிறுபோக வேளாண்மைச் செய்கைக்காக வருடாந்தம் சுமார் 350 ஏக்கர் வயல் நிலத்திற்குத்தான் அனுமதி வழங்கப்படுகின்றது.

அதனை 500 ஏக்கராக மாற்ற வேண்டுமாக இருந்தால் இங்குள்ள வாய்க் கால்களை புனரமைக்க வேண்டும்.

இவ்வாய்கால்களைப் புனரமைத்துத்தர இப்பிரிவுக்குப் பொறுப்பான பொறியியலாளர் என்ற வகையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்பதனை விவசாயிக் மத்தியில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது இவ்வாறு இருக்க 20 ஆயிரம் கனஅடி நீர் இக்கினியாகல குளத்திலிருந்து நவகிரி குளத்திற்கு வருடாந்தம் அனுப்பப்படல் வேண்டும். இந்த நீர் இற்றைக்கு 25 வருடகாலமாக வழங்கப்படாமல்தான் இருந்து வருகின்றது. இதனாலும் விவசாயிகளின் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ளும் நிலப்பரப்பினை அதிகரிக்க  முடியாதுள்ளது.

கோடை காலத்தில் இப்பகுதியில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்வதனால் வயலுக்கு வழங்குகின்ற நீரினை இப்பகுதி வாழ் பொதுமக்கள் கிணறுகளின் ஊற்றுக்களிலிருந்து குடிநீருக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்காலதில் குடிநீர் வழங்கும் செயன்முறையினையும் நாம் கருத்திற்கொள்வோம்.

எனவே விவசாயிகளாகிய நீங்கள் மிகவும் ஒற்றுமையுடனும் கூட்டுப் பொறுப்புடனும் முயற்சியுடனும் செயற்படவேண்டும' எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .