2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரண்டு நாட்களில், 46 இடங்களில் 'கிராமத்துக்கு ஒரு செயற்றிட்டம்'

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 46 இடங்களில் இரண்டு நாட்களில் 'கிராமத்துக்கு ஒரு செயற்றிட்டம்' மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை (12) மற்றும் சனிக்கிழமை (13) ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்கம், விளையாட்டுக் கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் அமைச்சரின் செயலாளர் பொன். ரவீந்திரன், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி. என்.பாக்கியராசா மற்றும் எஸ். சசிதரன், திவிநெகும உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

'கிராமத்துக்கு ஒரு செயற்றிட்டம்' எனும் திட்டத்தின் கீழ் ஒரு கிராமசேவை உத்தியோகஸ்தர் பிரிவுக்கு ஒவ்வொரு திட்டம் வழக்கப்பட்டுள்ளது.

ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரண்டு நாட்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட 46 அபிவிருத்தி செயற்றிட்டத்துக்கு 46,000,000 ரூபாய் ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டதாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இதன்போது துறைநீலவணை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஒந்தாச்சிமடம், மகிழூர், மகிழூர்முனை, பட்டிருப்பு, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், குருக்கள்மடம் போன்ற கிராமங்களில் உள்ள 46 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளிலேயே இத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதனுள் வீதிபுனரமைப்பு வேலைகள் மற்றும் மைதான புனரமைப்பு வேலைகளே உள்ளடங்குகின்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X