2025 மே 03, சனிக்கிழமை

மின்சார வேலிகள் அமைப்பதற்காக தலா 10 மில்லியன் ஒதுக்கீடு

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹூஸைன், ஜவ்பர்கான்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மின்சார வேலிகள் அமைப்பதற்காக ஒவ்வொரு  செயலாளர் பிரிவுக்கும் தலா 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' என வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெற்றுவரும் காட்டு யானைகள் மற்றும் மனித முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலான மாநாடு ஒன்று திங்கட்கிழமை (17) காலை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவிலங்குகள் காரியாலயம் இல்லாததால் உடனடியாக இரண்டு அலுவலகங்களை அமைக்குமாறு அமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.

அத்துடன், தற்சமயம் அம்பாறை வனவிலங்குகள் காரியாலத்துடன் இணைந்ததாக பணியாற்றும் சிங்களமொழி பேசும் அதிகாரிகளுக்குப் பதிலாக உடனயாக அமுலுக்கு வரும் விதத்தில் தமிழ்பேசும் அதிகாரிகளை நியமிக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டார்.

காட்டு யானைகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும், வீடழிப்புக்கும் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கும் உடனடியாக இழப்பீடுகளை வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.

மேலும் தற்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் தங்கி நிற்கும் காட்டு யானைகளை அடுத்த ஒரு வார காலத்திற்குள் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா, மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பி.செல்வராசா, பி.அரியநேத்திரன் உள்ளிட்டோரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் வன விலங்குத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X