2026 மே 06, புதன்கிழமை

வெசாக் கூடு அலங்கார போட்டியில் 12வது ஆட்லறி ரெஜிமண்ட் பிரிவு முதலாமிடம்

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.  நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற வெசாக் கூடு அலங்கார போட்டியில் இலங்கை இராணுவத்தினரின் 12வது ஆட்லறி ரெஜிமண்ட் பிரிவு முதலாமிடத்தை பெற்றுகொண்டுள்ளது.

இப்போட்டியில் இராண்டாவது இடத்தை 231 படைப்பிரிவின் மட்டக்களப்பிலுள்ள தலைமைக் காரியாலயமும் மூன்றாமிடத்தை இலங்கை இராணுவத்தினரின் பொறியியல் சேவை றெஜிமன்ட் பிரிவும் பெற்றுகொண்டுள்ளதாக 231 படைப்பிரிவின் மட்டக்களப்பு சிவில் இராணுவ இணைப்பதிகாரி நாலக ஹெட்டிகொட தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் கடந்த 24, 25, 26ஆம் திகதிகளில் இந்த வெசாக் கூடு அலங்கார போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியினை மட்டக்களப்பிலுள்ள 231 படைப்பிரிவின் தலைமைக் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த வெசாக் கூடு அலங்கார போட்டியின் பிரதான நடுவர்களாக 231 படைப்பிரிவின் மட்டக்களப்பு இராணுவ பிரிகேடியர் சுதந்த திலகரத்ன மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரி பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வெற்றிபெற்றோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சிவில் இராணுவ இணைப்பதிகாரி நாலக ஹெட்டிகொட மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .