2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் 1380 பட்டதாரிகளுக்கு நியமனம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1395 பட்டதாரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை தொழில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் ஷேகுதாவூத், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், கிழக்கு பல்லைக்கழக பதிவாளர் எம்.மகேசன் உட்பட பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னரும் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான கலாப்பகுதியில் பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற 1395 பட்டதாரிகளுக்கு தொழில் நியமனக் கடிதங்கள் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்  வழங்கப்பட்டன. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • sathees Tuesday, 03 July 2012 01:33 AM

    மிக்க சந்தோசமான விடையம் மட்டகளப்பில் 1395 பட்டதாரிகளுக்கு வேலைவாய்புக்காண பயிலுனர் நியமனக்கடிதம் கிடைத்தது. இவ் பட்டதாரிகளுள் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் 4 வருட கற்கைநெறியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் உயர் தேசிய கணக்கியல், வர்த்தக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும் உயர் தொழில்நுட்ப நிறுவன பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை ஏன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .