2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 14 பேருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2013 மே 08 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 14 பேருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழ்  தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த 14 பேரில் ஒவ்வொருவருக்கும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி 16,000 ரூபா தண்டம்  விதித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேற்றுச்சேனை கிராமத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 14 பேர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டு  களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே இவர்களுக்கு தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .