2025 மே 01, வியாழக்கிழமை

மாகாண அமைச்சரின் ஏற்பாட்டில் 150 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு

Super User   / 2014 ஜனவரி 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூர்த்தி உதவி பெறும் 150 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு பெறுவதற்கான கடிதங்கள் நேற்றிரவு வழங்கப்பட்டன.

ஏறாவூர் சிறு கைத்தொழில் பேட்டையில் மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் இணைப்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமடினால் பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்புப் பெறுவதற்கான இலவசக் கடிதங்களை வழங்கிவைக்கப்பட்டன.

சமூர்த்தி உதவி பெறும் ஒரு குடும்பத்திற்கு குடிநீர் இணைப்புப் பெறுவதற்காக 7,500 ரூபா செலுத்தப்படுகின்றது. இதில் 100 குடும்பங்களுக்கான கட்டணைத்தைச் மத்திய கிழக்கு நாட்டிலுள்ள கொடை வள்ளலான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல்ரராஷும் 50 குடும்பங்களுக்கான கட்டணத்தை மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தியுள்ளதாக மாகாண அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முஹைதீன்பாவா தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .