2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

குளவி கொட்டியதில் 17பேர் வைத்தியசாலையில்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

ஏறாவூர், ஐயங்கேணிப் பகுதியில் பனை மரத்திலிருந்த குளவிக்கூடொன்று கலைந்து அதிலிருந்து வெளியேறிய குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 17பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிகளின் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு வேண்டிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம்.பழீல் தெரிவித்தார்.
 
எவரும் ஆபத்தான கட்டத்தில் இல்லையென்றும் அவர் மேலும் சொன்னார். காய்ந்த பனை மட்டையை விறகுக்காக எடுக்க முற்பட்டபோது பனை மட்டைக்குள் மறைவாகக் கூடமைத்திருந்த குளவிகள் வெளியேறி அப்பகுதியினூடாகப் பயணித்தவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .