2026 மே 09, சனிக்கிழமை

dd

பாலமுனையில் ரூ.18 மில்லியன் செலவில் சாயமிடும் நவீன நிலையம் நிர்மாணம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 23 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.. ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கைத்தறி நூல்களுக்கு சாயமிடும் நவீன நிலையம் ஒன்று மட்டக்களப்பு, பாலமுனையில் அமைக்கப்படவுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்களுக்கு புத்துயிர் வழங்கும் நோக்குடனும் நெசவுத் தொழிலாளர்களின் கைத்தொழிலை நவீன முறையில் முன்னேற்றுவதற்கும் அவர்களின் உற்பத்திகளை உள்நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான முறையில் ஆடை தயாரிப்புக்களை தரப்படுத்துவதற்கும் இந்நிலையம் மூலம் நன்மைபயக்கும்.

இதனை கவனத்தில் கொண்ட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் இத்தொழிலை நவீனமயப்படுத்தி நெசவுக் கைத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை தமது அமைச்சின் மூலம் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சின் 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்நிலையம் அமைக்கப்கபடவுள்ளதாக அமைச்சின்  அதிகாரி மபூஸ் அஹமட் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .