2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 190.8 மில்லியன் செலவில் அபிவிருத்தி பணிகள்

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் 190.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்; அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது வழங்கப்பட்டது. 

தேசத்திற்கு மகுடம் திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பான கூட்டம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களும் பிரதி அமைச்சர்களுமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பஸீர் சேகுதாவூத் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஜவாஹிர் சாலி, எம்.எச்.எஸ்.இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சத்தியானந்தி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், நிதி திட்டமிடல் அமைச்சின் அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மற்றும் பிரதேச திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்வி அபிவிருத்திக்காக 68.5 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்திக்கு 68 மில்லியன் ரூபாவும், சுகாதார அபிவிருத்திக்கு 13 மில்லியன் ரூபாவும், விவசாய அபிவிருத்திக்கு 18.3 மில்லியன் ரூபாவும், நீர்ப்பாசன அபிவிருத்திக்கு 20.5 மில்லியன் ரூபாவும், பிரதேச நிர்வாகச் செலவுக்கு 2.5 மில்லியன் ரூபாவுமாக ஆறு திட்டத்திற்கு 190.8 மில்லியன் ரூபாவுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.  

இதேவேளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 213 மில்லியன் ரூபா நிதியில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரமும்; கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது  வழங்கப்பட்டது. 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .