2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை காணப்படுகின்றது: முரளிதரன்

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

'மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை காணப்படுகின்றது. ஆனால் வவுனியாவில் 2.1 வீதம் வறுமையே காணப்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது நாம் இன்னும் முன்னேற்றமடைவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்' என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

'அரசாங்கம் தற்போது சகல வளங்களையும் தந்துள்ளது. அதனை நாம் உரிய வகையில் பெற்றுக் கொள்ளவேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 27 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அவர்,

'இப்பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தை கட்டுவதற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுத்த முயற்சி தற்போது நிறைவேறியுள்ளது.

இப்பாடசாலைக்குரிய மாணவர் தங்குமிட வசதியினையும் நான் புனரமைத்துத் தருவேன் என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாநகரத்திலுள்ள பாடசாலைகளை விட இப்பாடசாலை துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகின்றது. இப்பாடசாலை மாணவர்கள் அனைத்து பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றார்கள். இதனால் இப்பிரதேசமும் முன்னேற்றம் கண்டுவருகின்றது.

அதுபோல் கழுவாஞ்சிகுடி பிரதேசத்தினை மையப்படுத்தி காணப்படுகின்ற களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையானது தற்போது தரமுயர்த்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டு.நகருக்கு அடுத்த பெரிய நகரமாக மட்டக்களப்பில் காணப்படுவது களுவாஞ்சிகுடிப் பிரதேசம்தான். களுவாஞ்சிகுடி பிரதேச சபையினை நகரசபையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

தற்போது தமிழர்களின் இருப்பு கல்வி மற்றும் பொருளாதாரத்தில்தான் தங்கியுள்ளது.

தற்போது மட்டக்களப்பில் 20.1 வீதம் வறுமை காணப்படுகின்றது. ஆனால் வவுனியாவில் 2.1 வீதம் வறுமையே காணப்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கின்றபோது நாம் இன்னும் எவ்வளவோ முன்னேற்றமடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

அரசாங்கம் தற்போது சகல வளங்களையும் தந்துள்ளது. அதனை நாம் உரிய வகையில் பெற்றுக்கொள்ள வேண்டும்
அரசு தற்போது வடமாகாணசபைத் தேர்தலை நடத்தவுள்ளது. இத்தேர்தலில் எந்தவொரு வன்முறைகளும் இடம்பெறக் கூடாது என ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளார்'  என்று தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .