2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

22 வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை (20) வீடு, வீடாக  டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, வீட்டுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு 22 வீட்டு உரிமையாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,  காத்தான்குடி நகரசபை ஆகியவற்றுடன், காத்தான்குடி பொலிஸாரும் மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகளும்  டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி,  புதிய காத்தான்குடி போன்ற பகுதிகளிலுள்ள 167 வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X