2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மட்டக்களப்பில் 2,200 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,200 பேருக்கு மட்டக்களப்பு சேவா லங்கா மன்றத்தின் அனுசரணையுடன் பின்லாந்து நாட்டின் விசன் போ ஓல் நிறுவனத்தால் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேவா லங்கா மன்றத்தின் பணிப்பாளர் கே.நாகராஜா தெரிவித்தார்.

இந்நிலையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தில் நேற்று புதன்கிழமை 131 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

கிரான், வெல்லாவெளி, வாகரை, வவுணதீவு, பட்டிப்பளை, வாழைச்சேனை, செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் கண் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கே மூக்குக்கண்ணாடிகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பின்லாந்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கண் பரிசோதனை நிபுணர்களால் கண் பரிசோதிக்கப்பட்டு  மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .