2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 24 ஆயிரம் விதவைகளும் மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் 16001 பேரும் உள்ளனர்: அரச அதிபர்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் விதவைகளாக 24 ஆயிரம் பேரும் , பெற்றோரினால் கைவிடப்பட்ட மற்றும் மாற்றுத்திறனுடைய பிள்ளைகள் 16001 பேரும் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் வியாபார சந்தை திறப்பு விழாவில் நேற்று  நடைபெற்றபோது அதில்  விசேட அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட பெண்முயற்சியாண்மையாளர்களுக்கு  சான்றிதழகள் வழங்கி வைத்து உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கை மத்திய வங்கியானது விவசாயிகளுக்கு வழங்கும் கடனுக்குரிய 14 வீத வட்டி வீதத்தில் அரசு 8 வீதத்தையும் பயனாளி 6 வீதத்தையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை ஐ.எல்.ஓ. நிறுவனம் வழங்கியுள்ளது.

சர்வதேச உல்லாசப்பயணிகள் உள்ளுரில் பனங் மற்றும் தும்புப் பொருட்களைக் கொண்டு  உற்பத்தி செய்யப்படும் பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர் ஏனெனில் செயற்கைப் பொருளான பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் பாவனைப் பொருட்கள் உக்கி அழிவதற்கு சுமார் 200 வருடங்கள் செல்லுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலயத்திற்கு சென்றால் முதலில் பெண்ணின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யப்படுகின்றது இதனால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்ககின்றது.

வேலையற்று இருப்பவர்கள் அரச உத்தியோகத்தில் நாட்டம் செலுத்தாது சுயதொழில் முயற்சியாளர்களாக மாறி பொருளாதாரத்தில் வளம் பெற்று வாழ்க்கைத் திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .