2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் மட்டக்களப்பில் 252,673 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட  247 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 71,479 குடும்பங்களைச் சேர்ந்த 252,673 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 11,634 குடும்பங்களைச் சேர்ந்த 41,239 பேரும் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 34 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 9,517 குடும்பங்களைச் சேர்ந்த 33,735 பேரும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம அலுவலகர்  பிரிவுகளிலிருந்தும் 7,430 குடும்பங்களைச் சேர்ந்த 26,199 பேரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 6,866 குடும்பங்களைச் சேர்ந்த 22,877 பேரும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 16 கிராம அலுவலகர்  பிரிவுகளிலிருந்தும் 6,263 குடும்பங்களைச் சேர்ந்த 20,999 பேரும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராம  அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 4,175 குடும்பங்களைச் சேர்ந்த 14,613 பேரும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 18 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 5,270 குடும்பங்களைச் சேர்ந்த 18,979 பேரும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 2,958 குடும்பங்களைச் சேர்ந்த 8,978 பேரும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 4,626 குடும்பங்களைச் சேர்ந்த 16,976 பேரும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 17 கிராம அலுவலகர்  பிரிவுகளிலிருந்தும் 4,626 குடும்பங்களைச் சேர்ந்த 16,886 பேரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 23 கிராம அலுவலகர்  பிரிவுகளிலிருந்தும் 1,730 குடும்பங்களைச் சேர்ந்த 6,400 பேரும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 2,738 குடும்பங்களைச் சேர்ந்த 9,031 பேரும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 14 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்தும் 3,999 குடும்பங்களைச் சேர்ந்த 15,772 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைய  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக நீர்க்கலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கும்  நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X