2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

செங்கலடி நகரினுள் நுழைந்த 3 யானைகளும் கலைக்கப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


செங்கலடி நகருக்கு அருகில் நுழைந்த 3 காட்டு யானைகளை  வனவளத் திணைக்கள அதிகாரிகள்; விரட்டிக் கலைத்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை செங்கலடி நகருக்கு அருகில் உள்ள கறுத்தப் பாலத்தடியில் 3 காட்டு யானைகள் வந்து சேர்ந்தன.

மேற்படி 3 யானைகளையும் கண்டு செங்கலடி நகரின் பின்புறமாக வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில், யானைகள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு வனவளத் திணைக்கள அதிகாரிகள், மேற்படி 3 யானைகளையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விரட்டிக் கலைத்துள்ளனர்.

பல திசைகளிலிருந்தும் யானை வெடிகளைக் கொளுத்தி வெடிக்க வைக்கப்பட்டு மேற்படி 3 யானைகளும் விரட்டிக் கலைக்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X