2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

புனர்வாழ்வு பெற்ற 30 இளைஞர்களுக்கு தொழிற்பயற்சி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், இவர்களுக்கான 6 மாதகால தொழிற்பயிற்சி இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நிர்மாணத்துறை அமைச்சுடன் இணைந்தும் ஜேர்மன் நாட்டு உதவியுடனும்; இவர்களுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குகிறது.

30 இளைஞர்கள் இத்தொழிற்பயிற்சினை பெறுவதுடன்,   குழாய் பொருத்துதல், மின்னிணைப்பு, தச்சு வேலை, மேசன் வேலை அலுமினியம் ஒட்டுதல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

மட்டக்களப்பு சர்வோதயத்தில் தங்கியிருக்கும் இவ்விளைஞர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்ட பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சிகளை பெறவுள்ளதாக மட்டக்களப்பு ஜெர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சுதேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மன்றேசாவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் ஆரம்பமான தொழிற்பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழிற்பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.லக்ஷ்மன் தலைமையில் ஆரம்பமானது. இதில் நிர்மாணத்துறை அமைச்சின் பயிற்சிப் பொறுப்பாளர் எம.;அமரசூரிய,  சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .