2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவகிரிநகர் 38ஆம் கிராமத்துக்கு, யோகேஸ்வரன் எம்.பி, விஜயம்

George   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நவகிரிநகர் 38ஆம் கொலனிக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை(28) விஜயம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பில், காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு தங்களது பாடசாலைக்கு ஒரு கணனி இயந்திரத்தை கோரியதுடன், விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புக்கு உதவி கோரினர்;. மேலும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டத்தில் தங்கள் பகுதியில் வீடு வசதி இருப்பவர்களுக்கு வசிப்பிட ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் எம்.பி.யிடம் கேட்டுக் கொண்டனர்.

325,000 ரூபாவில் கட்டப்பட்ட வீடு இன்றும் முடிவடையாத நிலையில் உள்ளதையும் மக்கள் எம்.பி.யின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். 

தமக்கு பொதுக் கிணறுகள் குறைபாடாக உள்ளதால் குடிநீர் பெற சிரமப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

தமது கிராமத்துக்கு வைத்திய சேவையை பெற்றுத் தருமாறும், நீர்ப்பாசன திணைக்களத்துக்கு உரியதாக உள்ள பிரதான வீதி அது புனரமைக்கப்படாமையால் பல சிரமங்களை கிராம மக்களும் குறிப்பாக தூர இடத்திற்கு செல்லும் மாணவர்களும் எதிர்கொள்வதாகவும் கூறினர்.

மக்களின் குறைபாடுகளை அறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலைக்கு கணனி உதவி பெற்றுத் தர முயற்சிப்பதாகவும், 2015ஆம் ஆண்டு ஆலய புனரமைப்புக்கு தனது பன்முக நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதாகவும், வீட்டுத் திட்டம் சம்பந்தமாக பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

தனியார் காணிகள் காடு மண்டிக் கிடப்பதால் யானைகளை வெளியேற்றும் விடயமாக உரிய அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

பொதுக் கிணறுகள் அமைப்பது சம்பந்தமாகவும் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அத்தோடு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர், களுவாஞ்சிக்குடி பொறியியலாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நீர்ப்பாசன வீதிகள் புனரமைக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் அலைபேசியில்  உரையாடினார்.

இதன் பின் அப்பகுதி முகாமைத்துவ குழுவை நீர்பாசன பணிப்பாளரையும், களுவாஞ்சிக்குடி காரியாலய பொறியியலாளரையும் சந்திக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
 
நீண்டகாலத்துக்கு பின் தமிழ் அரசியல் வாதியொருவர் தமது பகுதிக்கு வந்து தங்களை சந்தித்ததை இட்டு தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், ஆன்மீக தொண்டரும், ஆயுள்வேத வைத்தியருமான எஸ்;. விஸ்வலிங்கம், நவகிரி கண்ணகி அம்மன் ஆலய பிரதமகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X