2026 மே 09, சனிக்கிழமை

4 பிரதேச செயலகங்களில் முத்திரை இடும் பணி நிறைவு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளில்; நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி நிறைவடைந்துள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

கிரான், செங்கலடி, ஏறாவூர், வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அடுத்ததாக மட்டக்களப்பு நகரத்தில் நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடவுள்ளதாகவும் கூறினார்.

முத்திரை இடப்படாத நிறுத்தல் அளவைக்; கருவிகளை பயன்படுத்தும் வர்த்தகர்கள் எவராவது கண்டுபிடிக்கப்படின், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .