Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் 40 பயனாளிகளுக்கு சைக்கிள்களும் பைபர் கிளாஸ் பெட்டிகளும் நேற்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'திவிநெகும' திட்டத்தில் மீன் விற்பனை அபிவிருத்தியின் கீழ் கோறளைப்பற்று மேற்கில் 20 பயனாளிகளுக்கும் கோறளைப்பற்று மத்தியில் 20 பயனாளிகளுக்குமான சைக்கிள்களையும் பைபர் கிளாஸ் பெட்டிகளையும் பிரதிசயமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வழங்கிவைத்தார்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், ஓட்டமாவடிப் பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், வாழைச்சேனை பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்றொழில் பரிசோதகர் எம்.இம்தியாஸ், பிரதியமைச்சரின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் என்.எம்.கஸ்ஸாலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.; பிரதேச செயலாளர் நிஹாராமௌஜூத் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதியின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இரு முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு கணினிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago