Super User / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு 4,000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க சுமார் 3,000 வீடுகளை அமைப்பதற்கான நிதியினை நேரடியாக பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடுகளை நிர்மாணிக்கப்படும். ஏனைய 1,000 வீடுகளை இந்திய அரசு நிர்மாணித்து கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வீடும் தலா 550,000; ரூபா பெறுமதி வாய்ந்ததாகும் என அவர் குறிப்பிட்டார். இதனை கண்காணிப்பதற்காக தனது தலைமையிலான ஒரு கட்டுப்பாட்டுக் குழுவினை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
Iya Tuesday, 14 February 2012 12:08 AM
இதைத்தானே கருணாவும் சொன்னார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago