2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரும் இரு சிறார்களும் உட்பட குறைந்தபட்சம் 41 பேர் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட 2 படகுகளுடன் சந்தேக நபர்கள் இருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வாழைச்சேனை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

புத்தளம், சிலாபம், திருகோணமலை, முல்லைத்தீவு, வல்வெட்டித்துறை, காரைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .