2021 ஜூலை 31, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 6 வைத்தியசாலைகள் மூடப்பட்டன

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மாட்டத்திலுள்ள ஆறு வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர், மண்டபத்தடி, மகிழவெட்டுவான், ரெட்டைக்காடு, மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
 
குறித்த வைத்தியசாலையில் இருந்த நோயாளர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வைத்தியசாலை மூடப்பட்ட பகுதிகளில் இனம் காணப்படும் புதிய நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றபடியினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை ஊழியர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .