2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சுவாமி தந்திரதேவாவின் 63 ஆவது ஜனன தின நிகழ்வு

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்,Njt mr;Rjd;


மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க நாட்டு இந்து சமயத் துறவி சுவாமி தந்திரதேவாவின் 63 ஆவது ஜனன தின தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்திசேவா சங்கத் தலைவர் அ.செல்வேந்திரன், 63 நாயன்மார்களின் அறப்பணிமன்ற ஸ்தாபகர் சக்திகுமாரதாசன் மற்றும் இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து கோட்டமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் சுவாமி தந்திரதேவாவின் நினைவுப் பேருரையை கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர் பாரதிதாசன் நிகழ்த்தினார்.

இதன்போது, அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள் மற்றும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குடும்பமொன்றிற்கு சுயதொழில் புரிவதற்கான ரூபாய் 20 ஆயிரம் பெறுமதியான காசோலை என்பன நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .