2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்துகளில் நாளொன்றுக்கு 7 பேர் மரணமடைகின்றனர்: வகாப்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


உலகில் வருடத்திற்கு சுமார் 13 இலட்சம் விபத்துக்கள் நடக்கின்றன இலங்கையில் ஒருநாளைக்கு சராசரி 7 மரணங்கள் பதிவாகுகின்றன இதற்கு மன அழுத்தமும் மற்றும் மன நிலை குழப்பமும் காரணங்களாக அமைகின்றன என போக்குவரத்து திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தின் போக்குவரத்துப் பரிசோதகர் யு.எல். ஏ. வகாப் தெரிவித்தார்.

ஆன்மீக வாழ்க்கைத் திறன்களினூடாகப் பாதுகாப்பு எனும் தலைப்பில் வீதிப் பாதுகாப்புக்கான செயல்திட்டங்கள் பற்றி சாரதிகளைக் கொண்டுள்ள அரச, போக்குவரத்து சபை மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த பணி 2011-2014 உடன் இணைந்த பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தின் வீதிப் பாதுகாப்பு ஆரம்ப செயற்றிட்டம் பிரம்மகுமாரிகளின் மட்டக்களப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவர் மேலும் கூறுகையில், விவேகமாகச் சிந்தியுங்கள், பாதுகாப்பாகச் செயற்படுங்கள் மற்றும் உயிருக்கு மதிப்பளியுங்கள் என சாரதிகளுக்கு அறிவுறுத்துமாறு தலைவர்களைப் பணித்துள்ளார்.

வீதி விபத்துக்களுக்கு சாரதிகள், பாதசாரிகள், வாகனத்தின் நிலமை மற்றும் பிரையாணிகள் காரணங்களாக அமைகின்றன. எதிர்வரும் காலங்களில் வீதிவிபத்துக்களைத் தடுக்க ஆன்மீக உணர்வு சாரதிகளிடத்தில் அவசியம் என மேலும் கூறினார்.

அவுஸ்திரேலிய நாட்டின் பிரம்மகுமாரிகள் பிரதிநிதி சகோதரர் டேவிட், போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் எஸ். கனகசுந்தரம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி எம்.எம். நசீர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய ஓய்வு பெற்ற கணக்காளர் எஸ். ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X