2026 மே 01, வெள்ளிக்கிழமை

கடந்த ஒருவாரத்தில் சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்டுவந்த 9 இந்தியர்கள் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 9 இந்தியர்கள் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விஸாவில் இந்தியாவிலிருந்து இங்கு வந்த இவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நெல் அறுவடை மற்றும் வேளாண்மை வேலைகளில் சட்டவிரோதமான முறையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, கரடியானாறு, வாழைச்சேனை ஆகிய பகுதிகளிலேயே இந்த 9 இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டனர்.  கொக்கட்டிச்சோலை காஞ்சிரான்குடா பிரதேசத்தில் இருவரும் கரடியானாறு பிரதேசத்தில் இருவரும் வெல்லாவெளியில் மூவரும் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும் வாழைச்சேனையில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நெல் அறுவடை மற்றும்  வேளாண்மை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .