2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தளவாய் கிராம மக்கள் 900 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு , ஏறாவூர் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 900 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று (06) இணைந்து கொண்டனர்.

கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 900 பேருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் தளவாய்க் கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கிளைச் செயலாளர் ஐ. லலீந்திரன், தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் என். மோகன், செயலாளர் பி. மகராசா, தளவாய் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர் ரீ. சிவராசா, மாதர் சங்கத் தலைவி கே. பவானி, செயலாளர் எஸ். புஸ்பராணி, பொருளாளர் ரீ. நிசாந்தினி உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X