2025 மே 08, வியாழக்கிழமை

1,300 மெற்றிக்தொன் நெல்லை அரிசியாக்க நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில் 08 களஞ்சியசாலைகளிலுள்ள 1,300 மெற்றிக்தொன் நெல்லை, அரிசியாக்குவதற்காக தகுதிவாய்ந்த அரிசி ஆலைகளுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார்,  தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

நிதியமைச்சின் ஆலோசனைக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 08 களஞ்சிய சாலைகளில் 2018 – 2019 மஹாபோகத்தில்  கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் நெல்லை விரைவாக அரிசியாக்கி, லங்கா சதோச நிறுவனத்துக்கு கையளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல் தலைமையில், நிதியமைச்சில் அண்மையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், "களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள நெல்லை உடனடியாக பொருத்தமான அரிசி ஆலைகளினூடாக பொது ஒப்பந்த அடிப்படையில் உயர்தரத்தில் அரிசியாக்கி சதோச நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் " என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அதனை அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது​ தொடர்பாக, மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகத்தில், நேற்று (03) நடைபெற்ற விசேட கூட்டடமொன்றும் நடைபெற்றது.

மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி இக்பால், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், மாவட்டச் செயலகக்  கணக்காளர் கே.பிரேம்குமார், நெல் சந்தைப்படுத்தும் சபைகளின் அதிகாரிகள், தெரிவுசெய்யப்பட்ட தகுதியான அரிசிஆலை உரிமையாளர்கள் பலரும் அக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X