2026 மே 07, வியாழக்கிழமை

'13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழர் உரிமை பேசும் சக்திகள் ஒன்றுபட வேண்டும்'

Menaka Mookandi   / 2013 ஜூன் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'தமிழ் மக்களின் முதற்கட்ட அரசியல் தீர்வாக நடைமுறையில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தமிழர் உரிமை பேசும் சக்திகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 13ஆவது திருத்தச் சட்டம் தற்போது ஏற்பட்டுவரும் குழப்பம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழர்களின் உரிமை போராட்டத்தில் உணர்வோடு உரம்  கொண்டு எண்ணற்ற தியாகங்களின் மத்தியில் தமிழீழக்கனவோடு எழுந்து நின்ற வரலாறு நமக்குண்டு. இந்த வரலாற்றை கொண்டு தமிழர் உரிமை தொடர்பாக தொடற்சியாக கானல் அரசியல் நடாத்த நாம் எத்தணிக்கக்கூடாது.

தமிழர்களின் எண்ணற்ற தியாகங்களிலும் இழப்பு;களிலும் குளிர்காய்ந்துகொண்டு சுய அரசியல்லாபம்கருதி எந்த ஒரு தீர்வுத் திட்டமுமின்றி தமிழர் உரிமை அரசியல் பேசுவதில் நாம் சாதித்தவை ஒன்றுமில்லை.

எதிர்காலத்தில் இச்செயல்பாட்டில் நடப்போமானால் எமது கட்டிய கோவனமும் களவாடப்படும் சூழ்நிலைக்கு தமிழ் அரசியல்  நிலை பின் தள்ளப்படும். இத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் செயல்பாடே மிஞ்சியிருக்கும்.

இழப்புகளோடும் பெரும் எதிர்பார்ப்போடும் எஞ்சியிருக்கும் இளஞ்சமூகத்திற்கு நாம் எதைபெற்றுக்கொடுக்கப்போகின்றோம் என்பதில் தமிழ் தலைமைகள்  ஒருதீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியதொரு காலத்தின் கட்டாயத்தில்  நிற்கின்றோம்.

இந்தவகையில் இதுவரை தமிழ்மக்கள் தம்மை தாமே ஆழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கமோ அதற்கான முழுமையான அரசியல் தீர்வுத்திட்டமோ இனவாத அரசால் முன்வைக்கப்படவில்லை.

இருந்தும் பலர் விரும்பியோ விரும்பாமலோ பலமுரண்பாடுகளுக்கும் சிலவெளிநடப்புகளுக்கும் மத்தியில்  கைசாத்திடப்பட்ட  இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒன்றே இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டவாக்கமானது.

இதுவே  இலங்கையில் மகாணஆட்சி முறைமையை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனை பல்லினசமூகமூம் அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது ஆயினும் இவ்வொப்பந்தம் யாருக்காகசெய்யப்பட்தோ அம்மக்கள்முழுமையாக இதனை அனுபவிப்பதற்கான சந்தர்பம் வழங்கப்படவில்லை.

மாறாக வட கிழக்கு மாகாணம் இரண்டாகத்துண்டாடப்பட்டது மேலும் பல திருத்தச் சட்டங்களினூடாகஇருக்கின்ற அதிகாரங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இவ்வொப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த யாரும் முன்வரவில்லை. 

இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டம் ஒன்றே இலங்கை அரசியல் யாப்பில் சட்ரீதியாக இடம்பெற்றுள்ளது. இதனை இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள்  ஏற்றக்கொண்டுள்ளன, வடக்கு கிழக்கு உட்பட இலங்கைதீவுமுழுவதும் 26 ஆண்டு காலம் நடைமுறையில் உள்ள.

இவ்வொப்பந்தம் தொடர்பாக இந்தியயரசிற்கு வகைகூறும்கடப்பாடு இலங்கைஅரசிற்கு உண்டு, சர்வதேச ரீதியில் கேள்வி எழுப்பக்கூடிய அங்கிகாரத்தை இவ்வொப்பந்தம் பெற்றுள்ளது. மேலும்  தற்கால சூழ்நிலையில் தமிழ் அரசியற் தலைமைகளும் மக்களும் விரும்பியோ விரும்பாமலோ இவ் மாகாணநிர்வாக அமைப்புமுறைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மேற்குறிபிபட்ட விடயங்களை விட தமிழ் தலைமைகளைப் பொறுத்தமட்டில் தமிழர் உரிமைதொடர்பாக பேசுவதற்கோ போராடுவதற்கோ மக்கள் வாக்குப்பலம் ஒன்றே எஞ்சியுள்ளது. ஏனைய அனைத்து பலமும் இனவாத அரசின்கையிலே உள்ளன. 

எமது உரிமைகள் தொடர்பாக அக்கறையோடு செயற்படும்  நாடுகள் சர்வதேசரீதியாகவோ பூகோளரீதியாகவோ தங்கள் தேச நலன்களையும் கருத்தில்கொண்டே செயற்படுகின்றன இன்னிலையில் தங்களது எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டுமென்றே இச்சக்திகள் விரும்புகின்றன.

தங்களது நலன்களைதூக்கி எறிந்துவிட்டு என்னநடந்தாலும் எமக்காகச் செயற்படுவாக்கள் என்பது தமிழ்மக்கள்மனதில் கேள்வியாகவே உளளது இதுவே இன்றைய எமது அரசியற் சூழ்நிலையாகும்.

இந்த வகையில் எமது மக்களை தற்காலிகமாக பாதுகாக்க வேண்டுமாயின் நாம் தற்காலிகமாக ஒரு ஆரம்பத் தீர்வுத் திட்டத்திற்கு செல்லவேண்டிய நிற்பந்தம் எமக்கு விரும்பியோவிரும்பாமலோ ஏற்பட்டுள்ளது  நாம் எமது மக்களை பாதுகாக்க வேணடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களின் ஏகோபித்த இறுதித்தீர்வு தமிழ்ஈழம் ஏன்பதை யாராலும் மறுதலிக்க முடியாது இந்தக்கோட்பாட்டை முன்னெடுத்துச்செல்வதற்கு நடைமுறைச் சாத்தியப்பாடான வழிவகைகள் உடாக எமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்கும் ஆரம்பப்படியாக சட்டரீதியாக கையில் உள்ள 13ஆவது திருத்தச் சட்ட ஆட்சி அதிகாரம் ஒன்றே ஆரம் அரசியல்தீர்வாக உள்ளது.

கையில் சாத்தியமான ஆரம்ப அதிகாரங்களை வைத்துக்கொண்டு  நாங்கள் அந்நியப்பட முடியாது  இணைந்த வட கிழக்கு எமது பாரம்பரியதாயகம்  எனவே முதற்படியாக நாங்கள் சட்டரீதியாக உள்ள  13ஆவது திருத்தச்சட்டத்தை  முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியாவையும் இலங்கையையும் கோரவேண்டும்.

இத்தளத்தில் நின்றுகொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயலாற்ற வேண்டுமென ஐந்து தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .