2026 மே 09, சனிக்கிழமை

13ஐ திருத்த நான் எதிரானவர்: முரளிதரன்

Super User   / 2013 ஜூன் 26 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

13ஆவது திருத்தச் சட்டமூலத்தினை அகற்றும் நடவடிக்கைக்கு நான் எதிரானவர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,

தமிழர்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தங்களை பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே நாங்கள் பலம்பெற்ற சமூகமாக மாற முடியும். எங்களை இங்கிருந்து யாரும் அகற்ற முடியாது. குடியேற்றங்களை செய்ய முடியாது. நாங்கள் பலம் பெரும்போதே நாங்கள் எம்மை பலப்படுத்திக்கொள்ள முடியும்.

பாடசாலைகளில் தொழில்நுட்பட கல்வியை அறிமுகம் செய்யும் திட்டத்தின் கீழ் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே உள்ளீர்க்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் கல்வியமைச்சரை சந்தித்து எனது ஆட்சேபனையை தெரிவித்தேன். நாங்கள் முஸ்லிம் பாடசாலைகளை உள்ளீர்த்ததை எதிர்க்கவில்லை. அதில் தமிழ் பாடசாலைகளை உள்ளீர்க்காமை தொடர்பிலேயே எனது ஆட்சேபனையை தெரிவித்தேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமானவர்கள் தமிழர்கள் உள்ளபோது ஒரு தமிழ் பாடசாலை கூட உள்ளீர்க்கப்படாதமை தொடர்பில் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது, அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன் கீழ் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இந்த தொழில்நுட்ப கல்வி பாடத்தினை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் வறுமையான மாவட்டமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து வளங்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் இந்த நிலையேற்பட்டுள்ளது.இ துதொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .