2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

14 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகள் 44 மீட்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் பாரிய அளவிலான 44 தொலைத்தொடர்பு கோபுர பெற்றிகள்ரிகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சுக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார் கைப்பற்றப்பட்டுள்ள பேட்டரி ஒன்றின் பெறுமதி சுமார் 30,000 என தெரிய வருகிறது இதன்படி சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான பெற்றரிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பெற்றரிகளும் சம்மமாந்துறை தொலைதொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பெற்றரிகளும் கிடைக்கப் பற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள பெற்றரிகளும் குறித்த சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார் இது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X