Freelancer / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாரிய பிணைமுறி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு 2000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊழல் எதிர்ப்பு படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2030 ஜூன் முதலாம் திகதி முதிர்ச்சியடையும் 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறைகளை, சந்தை வட்டி விகிதத்தை விடக் குறைவான விலையில் ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துள்ளதாகவும் நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டினார்.
சந்தையில் வட்டி விகிதம் 10.12 வீதமாக இருந்தபோது, திட்டமிட்ட அடிப்படையில் 9.75 வீதம் என்ற குறைந்த வட்டி விகிதத்திற்கு இந்த பிணைமுறைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஒரு கொடுக்கல் வாங்கலினால் மட்டும் நாளொன்றுக்கு ஏற்படும் நட்டம் 500 இலட்சம் ரூபாவைத் தாண்டுவதாகவும், இதன் ஒட்டுமொத்த இழப்பு 2000 மில்லியன் ரூபாவை விட அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோசடியின் பின்னணியில் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சோமதாச பலிஹவடன என்பவர் செயற்பட்டுள்ளார் எனவும் இவரை நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவே நியமித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளின் முறையான அனுமதியின்றி இடம்பெற்றுள்ள இந்த பாரிய நிதி இழப்பிற்கு, நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரே நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மகரகம நகர சபைக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட, எவ்வித அனுபவமுமற்ற ஒருவரை ஜனாதிபதி காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்துள்ளதாகவும், இதனால் விரக்தியடைந்த 15-18 வருட அனுபவம் கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் 300 பில்லியன் ரூபா நிதியைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் இவ்வாறான கள்ளத்தனமான கொடுக்கல் வாங்கல்களால் திவாலாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட ஒரு நிதி அபராதம் என்றும் அவர் சாடினார்.
இந்தச் சம்பவம் குறித்து லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். (a)
21 minute ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 Apr 2026