Freelancer / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மூன்றாம் இடத்தில் த.வெ.கவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்.டி.டி.வி ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி தி.மு.க. 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. த.வெ.க. 18-24 தொகுதிகளிலும், ஏனையவை 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அக்னி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 64 தொகுதிகளிலும், த.வெ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி தி.மு.க. 145-160 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 50-65 தொகுதிகளிலும், த.வெ.க. 13-18 தொகுதிகளிலும், ஏனையவை 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேட்ரிஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. 122 -132 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 87-100 தொகுதிகளிலும், த.வெ.க. 10-12 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரிபப்ளிக்-பி மார்க்’ வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி 125-145 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 65-85 தொகுதிகளிலும், த.வெ.க. 16-26 தொகுதிகளிலும், ஏனைய கட்சிகள் 1-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆக்ஸிஸ் மை இண்டியா’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் அ.தி.மு.க. கூட்டணி 22 முதல் 32 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், த.வெ.க. 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டைம்ஸ் நவ் - ஜேவிசி’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க. கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், த.வெ.க. 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 85.1 வீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற உள்ளது. (a)
1 hours ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Apr 2026