2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

2 மாதங்களின் பின்னர் பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பரிபாலனத்தின் கீழுள்ள மண்முனை வடக்கு கோட்டத்துக்கான கோட்டக்கல்விப் பணிப்பாளராக அதிபர் சேவைத்தரம் 1ச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபருமான  கே.அருட்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

கடந்த 25ஆம் திகதி முதல் மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளாராக கடமையாற்றும்படி,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டப்ளியூ.ஜீ. திஸாநாயக்கவல்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமையை, நேற்று (30) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளாராக இருந்த ஏ.சுகுமாரன் கடந்த 4.8.2017 திகதியன்று கல்விச்சேவையிலிருந்தும் கோட்டக்கல்விப்பாளர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றதையடுத்து சுமார் இரண்டு மாதமாக இவ் வெற்றிடம் நிலவியது.

மட்டக்களப்பு, குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு நகரத்தை வசிப்பிடமாக கொண்ட கே.அருட்பிரகாசம், 1978.11.7 திகதி ஆசிரியசேவையில் நியமனம் பெற்று வவுனியா கோமரசன்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராக முதலில் கடமையாற்றினார் .

அதன்பின்பு கல்வியமைச்சின் அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1991 முதல் 2017.10.25 வரையும் அதிபராக பல பாடசாலைகளிலும், இறுதியாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X