2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

2 வயது குழந்தை மீது பாலியல் சேஷ்டை

Editorial   / 2022 டிசெம்பர் 29 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையான  சித்தியின் மகளுக்கு பாலியல் சேஷ்டை விட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனையே ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் புதன்கிழமை (28)  உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன், சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாதங்களேயான பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பித்துள்ளார். அத்துடன், அந்தக் குழந்தை மீது பாலியல் சேஷ்டையையும் விட்டுள்ளார்.

இதனை அவர்களது உறவினரான பெண்ணொருவர் அவதானித்து,  குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில், தனது சகோதரனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கனகராசா சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X