Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இருபதை ஆதரித்த அரசியல் வியூகத்துக்கான பலாபலன்கள், சமூக நலன்களாக விரைவில் வெளிப்படுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கையை, இன்று (02) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அவர், அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“எதையும் நிபந்தனையாக முன்வைக்காமல் 20ஐ ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில், முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ளது. இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம். காலப்போக்கில் சமூகநலன்கள் கைகூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும்.
“காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
“அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல் வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை. கொரோனா வைரஸ் பரவல் சூழலில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும் நாங்கள் 20ஐ ஆதரிக்கவும் இல்லை.
“அல்லாஹ்வின் உதவியால், எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago