2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் சுகாதார நிலையம் அமைத்து தருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகரசபை பிரிவுக்குட்பட்ட  மஞ்சந்தொடுவாய் கிராமத்தில் சுகாதார நிலையமொன்றை அமைத்து தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரிடம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் என்.கே.றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு மாநகரசபை உறுப்பினர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய்; தெற்கு, மஞ்சந்தொடுவாய் வடக்கு, நாவற்குடா, நாவற்குடா கிழக்கு போன்ற நான்கு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சுமார் 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார பராமரிப்பு நிலையம் இல்லாது  சிரமப்படுகின்றனர்.  

மேற்படி பகுதிகளிலுள்ள மக்களுக்கான  சுகாதார பராமரிப்பு நிலையம் இல்லாததால், நீண்டகாலமாக மஞ்சந்தொடுவாய் ஆயுர்வேத வைத்தியசாலையிலேயே கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கிளினிக், குழந்தைகள் பராமரிப்பு போன்றன நடைபெறுகின்றன.
மேலும் குழந்தைகள்  நிறைபார்ப்பதற்கும்  அவர்களுக்கான நோய்த்தடுப்பு ஊசிமருந்துகள் ஏற்றுவதற்கும் கல்லடிப் பகுதியிலுள்ள சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு சுமார் 3 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே, குறித்த பகுதி மக்களின் நலன் கருதி மஞ்சந்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரு அரசாங்கக் காணிகளில்   ஒரு காணியில் சுகாதார பராமரிப்பு நிலையமொன்றை அமைத்து தருமாறு அக்கடிதத்தில்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .