Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
ஏறாவூர் வம்மியடிப்பிள்ளையார் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை ஆலய வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
வம்மியடிப்பிள்ளையார் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தலைவர் முத்துக்கிருஸ்ணன் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்துக்கலாசார திணைக்களத்தின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம் கலந்துகொண்டார்.
சுமார் 500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் ஏறாவூர் வம்மியடிப்பிள்ளையார் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறுகள் இதுவரையில் வெளிவராத நிலையில் விஸ்ப்பிரம்மஸ்ரீ வை.எஸ்.காந்தன் குருக்களினால் இந்த நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
இந்த நூலில் ஆலய வரலாறு மற்றும் திருப்பதிகம், திருப்பொன்னூஞ்சல் என்பன பதிப்பிக்கப்பட்டுள்ளன. நிகழ்வின் ஆசியுரையை ஆலய மகோற்சவகால குரு குமார பிரபாகரன் குருக்கள் வழங்கினார். நயவுரையை இந்துக்கலாசார திணைக்களத்தின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் எஸ்.தெய்வநாயகம் ஆற்றினார். இதனைத்தொடர்ந்து நூல்வெளியீடு இடம்பெற்றதுடன், நூலின் பொன்னூஞ்சல் பாடலொன்றும் அருட்கவியரசு கண்மணிதாசன் விஸ்ப்பிரம்ம ஸ்ரீ வை.எஸ்.காந்தன் குருக்களால் பாடப்பட்டது.
.jpg)
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago