Menaka Mookandi / 2011 மே 13 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்ஞிரங்குடா, கொத்தியாபளை, கரவெட்டி, சொறுவாமுனை, வவுணதீவு ஆகிய கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக 12 மீன் பிடி வள்ளங்கள், வலைகள் போன்றவை வழங்கப்பட்டன்.
கரித்தாஸ் எகெட் நிறுவகத்தால், அதன் இயக்குனர் அருட்பேராசிரியர் த.ஸ்ரீதரன் சில்வெஸ்ரரின் பணிப்புரையின் கீழ் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
நிறுவகத்தின் ஆளணி நிர்வாக முகாமையாளர் எஸ்.தர்மகுலராஜா, திட்ட உத்தியோகஸ்தர் பீ.ஏ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ரி.பாலமுகுந்தன் மற்றும் நிறுவக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்.
இதற்கான நிதி உதவியை கரித்தாஸ் சுலோவேனியா நிறுவனம் வழங்கியிருந்தது. இதன் மொத்த பெறுமதி நான்கு இலட்சத்து எண்பதாயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago