Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கிராமத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த லோகிதன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
நேற்று புதன்கிழமை காலை தனது குடும்பத்தினருடன்; கதைத்துக் கொண்டிருந்த இவர், நண்பகல் வேளையிலிருந்து காணாமல்போன நிலையில் உறவினர்கள் இவரைத் தேடி அலைந்துள்ளனர்.
பின்னர் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்கு இவர் சென்றதாக கேள்விப்பட்ட உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது காட்டுப் பகுதியில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இவர் சடலமாகத் தொங்குவதைக் கண்டனர்.
குடும்பத்தவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாமென அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
13 minute ago
57 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
57 minute ago
58 minute ago