2021 மே 17, திங்கட்கிழமை

பாம்பு கடிக்கு இலக்காகி மாணவன் பலி

Kogilavani   / 2011 ஜூன் 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுஷன்)

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை பாம்பு கடிக்கு இலக்காகி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

க.பொ.த உயர்தர வகுப்பில் கற்றுவந்த மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவரை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த  போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இம் மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .