2021 மே 11, செவ்வாய்க்கிழமை

திண்ம கழிவகற்றல்; மத்திய சுற்றாடல் அதிகார சபை காத்தான்குடி நகர சபைக்கு நிதியுதவி

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிலிசெற நிறுவனம் பத்து கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர சபைக்கு மாத்திரமே திணம கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழுள்ள பிலிசெற எனும் நிறுவனத்தின் மூலம் இந்த நிதி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர சபை மற்றும் வட மாகாணத்தில் சாவகச்சேரி நகர சபை ஆகியன இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கினங்க காத்தான்குடி நர சபைக்கு முதற் கட்ட 80 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X