2026 மே 14, வியாழக்கிழமை

dd

நாடு நகரத்திட்டமிடல் திருத்தற் கட்டளைச் சட்டத்திற்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் சிந்தித்தே ஆதரவளிக்

Super User   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

'மாகாண சபைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்கள் பற்றிச் சிந்திக்காமால், நாடு நகரத்திட்டமிடல் திருத்தற் கட்டளைச் சட்டமூலம் எதிர்வரும் 13ஆம்திகதி சபையில் முன்வைக்கப்படும் போது கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் ஆதரவளிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் நாடு நகரத் திட்டமிடல் திருத்தற் கட்டளை சட்டமூலம்  எதிர்வரும் 13ஆம் திகதி வ விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் துரைரெத்தினம், 13 ஆவது திருத்தத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக பல விடயங்கள் இத்திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசு தன் கைக்குள் கொண்டு வருவதற்கு முயற்சியை மேற்கொள்கிறதா என்ற ஐயப்பாடு இருக்கிறது.

அதனால், இத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் நன்கு ஆராய்ந்து, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.  அது கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பறிக்கும் முயற்சியாக இருந்தால் அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும்,  அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது' என்றார்.

தொடர்புடைய செய்தி:

நாடு, நகரத்திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் குறித்த கிழக்கு மாகாண சபையில் 13 ஆம் திகதி விவாதம்


  Comments - 0

  • Iya Saturday, 04 February 2012 11:21 PM

    பேசுவதை நிறுத்திவிட்டு ,முற்று முழுதாக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து குரல் கொடுங்கள். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .