Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பள்ளிவாசல் வீதி, மீராவோடை - 04, வாழைச்சேனையை சேர்ந்த கயாத்து முகம்மட் ஜமால்தீன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சுகயீனமடைந்த இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாழைச்சேனைப் பொலிஸாரினால் ஒரு மாதத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட இவர், வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago