2026 மே 14, வியாழக்கிழமை

விபத்தில் இரு இராணுவ வீரர்கள் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இரு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றும் இவ்விருவரும் விடுமுறையில் அம்பாறைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.  மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .