Kogilavani / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மட்டக்களப்பு வெள்ளாவெலி காக்காச்சி வெட்டைப் பகுதியில் மாடு வாங்குவதற்காகச் சென்ற குடும்பஸ்தரின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி - 9 பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் நாகூர் பிச்சை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் காணாமல் போனமை தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையம், மண்டூர் பொலிஸ் நிலையம் மற்றும் வெள்ளாவெலி இராணுவமுகாம் ஆகியவற்றில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாளாந்தம் காலையில் மாடு வாங்குவதற்காகச் செல்லும் இவர் மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்புவது வழக்கம். ஆனால் இவ்வாறு சென்ற இவர் கடந்த இரு தினங்கள் சென்றுள்ள போதிலும் வீட்டுக்குத் திரும்பவில்லை.
இந் நிலையில் வெள்ளாவெளி ஆற்றில் இவரின் சடலம் கை கட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மண்டூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago